வண்ணங்களும் எண்ணங்களும்

ஏதும் வரையப்படாத வெண்ணிற காகிதம் வெறுமை தரும். சில வண்ணங்களை ஆங்காங்கே பூசினாலும் கிறுக்கலாகவே தோன்றும். அவற்றை தேவையான இடங்களில் தேவையான அளவில் பூசிய பின்னரே ஓவியமாய் உயிர் பெரும்.

அதுபோல தான் நம் மனித மனமும். எவ்வெண்ணமும் இல்லாவிட்டால் வாழ்க்கை வெறுமையாய் தோன்றும். நல்லவை, தீயவை என அனைத்து விதமான எண்ணங்கள் உதித்தாலும் மனம் குப்பையாகவே மாறும். அவ்வெண்ணங்களை சீர் செய்தால் மட்டுமே வாழ்க்கை உயர்வு பெரும்.


Leave a comment