Glen Canyon Dam – AZ

பார்க்கிங்கிலிருந்து வெளியே வந்ததும் இப்போது  பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுகள். அவற்றின் உலோகக் கைப்பிடியைப் பற்றிக்கொண்டு ஓர் சிறிய நடைப்பயணம். பாதையின் முடிவில் இங்கும் ஓர் பள்ளத்தாக்கு. இப்பள்ளத்தாக்கின் நடுவிலும் ஓர் ஆறு. அங்கே Horseshoe Bend-இன் விளிம்பில் நின்று பார்த்த அதே கொலராடோ ஆறு(Colorado River) இங்கும் புகுந்து ஓடிக் கொண்டிருந்தது.

இடப்பக்கம் நதிநீரும் அந்நதிநீர் கிழித்தோடும் பள்ளத்தாக்கும் வலப்பக்கம் அணைக்கட்டும் தெரிந்தது. இப்படி இயற்கையின் படைப்பும் மனிதனின் படைப்பும் இடமும் வலமுமாய் காட்சியளித்தன. கிளென் பள்ளத்தாக்கின்(Glen Canyon) விளிம்பில் நின்று கொலராடோ ஆற்றையும் Glen Canyon அணையையும் பார்த்து விட்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு Antelope Canyon புறப்பட்டோம். போகும் வழியெங்கும் எங்களைத் தொடர்ந்து வரும் இந்த கொலராடோ ஆறு எவ்வளவு நீண்டது என்று தெரிந்துக் கொள்ள ஆர்வமும் துளிர்விட்டது.. பயணங்கள் முடிந்து வீடு திரும்பிய பிறகு அதனைப் பற்றி படிக்கவும் முடிவு செய்தேன்.

Translation

Leave a comment

Leave a comment