இன்றைய பயணம் இதோ தொடங்கி விட்டது! Zion National Park-இன் கிழக்கு வாயிலிலிருந்தே இருபக்கங்களிலும் பழுப்பு நிறத்தில் கம்பீரமாய் பெரிய பெரிய மணற்கற்கள் நின்றன. அவற்றோடு அடர்பச்சை மரங்கள் ஒன்று கூடி கடந்து செல்வோரை வசீகரிக்க செய்தன. கொஞ்ச தூரம் கடந்ததும் சாலையின் நடுவே ஓர் பெரிய மணற்கல்(Checkerboard Mesa) குறுக்குவெட்டுகளுடன் தெரிந்தது. அதை நெருங்க நெருங்க இன்னும் பெரிதாய் தெரிந்தது. அக்கல்லின் உச்சியிலிருந்து அலையலையாய் வடிவமைப்பு நேற்று பார்த்த Antelope Canyon-இன் வடிவமைப்பை ஒத்திருந்தது. நிச்சயம்Continue reading “Zion National Park – UT”
Category Archives: Pin a Place – Tamil
Glen Canyon Dam – AZ
பார்க்கிங்கிலிருந்து வெளியே வந்ததும் இப்போது பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுகள். அவற்றின் உலோகக் கைப்பிடியைப் பற்றிக்கொண்டு ஓர் சிறிய நடைப்பயணம். பாதையின் முடிவில் இங்கும் ஓர் பள்ளத்தாக்கு. இப்பள்ளத்தாக்கின் நடுவிலும் ஓர் ஆறு. அங்கே Horseshoe Bend-இன் விளிம்பில் நின்று பார்த்த அதே கொலராடோ ஆறு(Colorado River) இங்கும் புகுந்து ஓடிக் கொண்டிருந்தது. இடப்பக்கம் நதிநீரும் அந்நதிநீர் கிழித்தோடும் பள்ளத்தாக்கும் வலப்பக்கம் அணைக்கட்டும் தெரிந்தது. இப்படி இயற்கையின் படைப்பும் மனிதனின் படைப்பும் இடமும் வலமுமாய் காட்சியளித்தன. கிளென் பள்ளத்தாக்கின்(GlenContinue reading “Glen Canyon Dam – AZ”
HorseShoe Bend – AZ
ஆழமான மென்மணலாலான நடைபாதை ஒன்று பார்க்கிங்கிலிருந்து Horseshoe Bend-இற்கு எங்களை கூட்டிச் சென்றது. பாதி தூரம் வரை சமதளம் தான். அதில் கஷ்டப்பட்டு ஏறுவதற்கோ இறங்குவதற்கோ பெரிய சிரமம் ஏதுமில்லை. தூரத்தில் ஆங்காங்கே பள்ளத்தாக்குகள் இருப்பதை பார்த்துக் கொண்டே நடந்தோம். இடம், வலம், முன், பின் என கண்ணில் பட்டவையெல்லாம் செம்பாறைகள் மட்டுமே. பாதையின் முடிவில் பார்வையாளர்கள் சிலர் செம்பாறைகள் மேல் ஏறி நின்று எதையோ குனிந்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிலர் பாறைகளிலிருந்து அவர்கள் எப்போது இறங்குவார்கள்Continue reading “HorseShoe Bend – AZ”
Upper Antelope Canyon – AZ
காலை 11:30 மணிக்கு Antelope Canyon சுற்றி பார்க்க ஆன்லைன் பதிவு செய்திருந்தோம். Horseshoe Bend என்னும் இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு 11 மணிக்கெல்லாம் Antelope Canyon செல்வதற்கு டிரக்குகள் புறப்படும் இடத்தை அடைந்து விட்டோம். முன்பதிவு செய்த எல்லோரையும் சிறு சிறு குழுக்களாக பிரித்து தனித்தனி டிரக்குகளில் ஏற்றி அனுப்பினார்கள். சுற்றிலும் பாலைவனம் போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் மட்டுமே தெரிந்தது. தூரத்தில் தூசி மண்டலமாய் காட்சியளித்தது. அதற்குள் டிரக்குகள்Continue reading “Upper Antelope Canyon – AZ”
Yellowstone National Park
Yellowstone National Park-இன் மேற்கு நுழைவுவாயில் வழியாக Montana-விலிருந்து காலை 7:20 மணி வாக்கில் நுழைந்தோம். வானில் சூரியன் பிரகாசமாய் ஒளிர அவனை தன் அகன்ற நூறு கைகளால் மேல்நோக்கி வேண்டுவது போல் மரங்களெல்லாம் சாலையின் இருபுறமும் காட்சியளித்தன. இடது புறம் ஓடிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு ஆறு. பெயர் என்னவாக இருக்கும்? வரைபடத்தில் பார்ப்பதற்குள்ளே வண்டியும் நகர்ந்து விட்டது வரைபடத்தில் இடமும் நகர்ந்து விட்டது. என்னவாக இருந்தால் என்ன? சாலையின் கீழே புகுந்து வளைந்து வலதுபக்கம் ஓடியContinue reading “Yellowstone National Park”