

புத்தகங்கள் நாவல்களெல்லாம் பெரிதாய் படித்துப் பழக்கமில்லாதவள் நான். இப்போது அவ்வப்போது புத்தகங்களுடனும் நேரம் கழிக்கிறேன். முன்பைவிட நிறைய எழுதவும் செய்கிறேன். சிரிப்பு, அழுகை, கோவம் என்று என்ன தோன்றினாலும் எழுதுகிறேன். பிடித்தவற்றையெல்லாம் எழுதுவது எனக்கு ஏதோ ஓர் விதத்தில் மன நிறைவையும் அளவில்லா ஆனந்தத்தையும் தருவதாய் உணர்கிறேன். எழுதுவது மட்டுமல்லாமல் பொழுதுபோக்காய் ஓவியங்கள் வரையவும் பிடிக்கும். நான் எழுதும் சிறு கதைகள், சின்ன சின்ன துணுக்குகள், கவிதைகள், ஓவியங்கள், நான் படித்ததில் ரசித்தவை, பகிர்ந்து கொள்ள விரும்புபவை என்று சிலவற்றை இப்பக்கத்தில் பகிர்கிறேன். இவ்வலைத்தளம் ஓர் உணர்ச்சிகளின் சங்கமம்.
See translation
I was not much interested in books and novels. Lately I’ve been getting used to spending time with books too. I also write a lot more than before Now and then I also spend time with books. I also write more than before. I write whatever emotions arise whether it be laughter, crying, anger. I feel that writing all my favorites gives me some kind of satisfaction and immeasurable joy. Apart from writing, he also likes to draw as a hobby. In this page I will share some of the short stories I write, small pieces, poems, paintings, what I have read and enjoyed and would like to share. This website is a confluence of emotions.
வலிகளே வலிமை தரும்!
சிறுமி ஒருத்தி தன் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். தோட்டத்தின் மூலையில் இருந்த அச்செடி அவள் கண்ணில் பட்டது. சில நாட்களுக்கு முன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. Read more
போதுமென்ற மனமே!
கவிஞர்கள் பலர் பெண்களின் அழகோடு ஒப்பிட்டு வர்ணிக்கும் மிகவும் அழகான பறவை. நடனம் என்றாலே இப்பறவைதான் நம் நினைவுக்கு வரும். Read more
If you want to be strong💪, Learn to fight alone🛡⚔.

வலிகளிலும் வேதனைகளிலும் வருவதுதான் வீரம். வாழ்க்கையில் எல்லாம் நல்ல விதமாக அமைந்துவிட்டால் நீ ஒரு பெரிய கோழையாகத்தான் இருப்பாய்.
நந்தவனம்🌹🌹🌹

பூஞ்சோலையில் பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு நடுவே பட்டாம்பூச்சியாய்… கற்பனை கதைகளில் வரும் தேவதை போல் துள்ளிக் கொண்டு ஓடினாள் குட்டி பாப்பா கயல்… Read more



