Blog

  • Upper Antelope Canyon – AZ

    காலை 11:30 மணிக்கு Antelope Canyon சுற்றி பார்க்க ஆன்லைன் பதிவு செய்திருந்தோம். Horseshoe Bend என்னும் இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு 11 மணிக்கெல்லாம் Antelope Canyon செல்வதற்கு டிரக்குகள் புறப்படும் இடத்தை அடைந்து விட்டோம். முன்பதிவு செய்த எல்லோரையும் சிறு சிறு குழுக்களாக பிரித்து தனித்தனி டிரக்குகளில் ஏற்றி அனுப்பினார்கள். சுற்றிலும் பாலைவனம் போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் மட்டுமே தெரிந்தது. தூரத்தில் தூசி மண்டலமாய் காட்சியளித்தது. அதற்குள் டிரக்குகள்… Read more

  • Yellowstone National Park

    Yellowstone National Park-இன் மேற்கு நுழைவுவாயில் வழியாக Montana-விலிருந்து காலை 7:20 மணி வாக்கில் நுழைந்தோம். வானில் சூரியன் பிரகாசமாய் ஒளிர அவனை தன் அகன்ற நூறு கைகளால் மேல்நோக்கி வேண்டுவது போல் மரங்களெல்லாம் சாலையின் இருபுறமும் காட்சியளித்தன. இடது புறம் ஓடிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு ஆறு. பெயர் என்னவாக இருக்கும்? வரைபடத்தில் பார்ப்பதற்குள்ளே வண்டியும் நகர்ந்து விட்டது வரைபடத்தில் இடமும் நகர்ந்து விட்டது. என்னவாக இருந்தால் என்ன? சாலையின் கீழே புகுந்து வளைந்து வலதுபக்கம் ஓடிய… Read more

  • வலிகளே வலிமை தரும்!

    சிறுமி ஒருத்தி தன் வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். தோட்டத்தின் மூலையில் இருந்த அச்செடி அவள் கண்ணில் பட்டது. சில நாட்களுக்கு முன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. “இதோ! இந்த செடியில இருக்குற புழு தான் இன்னும் கொஞ்ச நாள்ல பட்டாம்பூச்சியா மாறும். அதனால இத தொந்தரவு பண்ணாம விளையாடனும். புரிஞ்சுச்சுச்சா?”. இப்போது அந்த புழு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வம் வந்தது. விரைந்து சென்று பார்த்தாள். அன்று புழு இருந்த… Read more

  • போதுமென்ற மனமே!

    கவிஞர்கள் பலர் பெண்களின் அழகோடு ஒப்பிட்டு வர்ணிக்கும் மிகவும் அழகான பறவை. நடனம் என்றாலே இப்பறவைதான் நம் நினைவுக்கு வரும். இந்நேரம் உங்கள் நினைவில் உதித்திருக்கும். ஆம், மயில் தான். அவ்வளவு அழகுக்கூடிய மயிலுக்கு பிரம்மாவின் மேல் ஏனோ கோவம். “இப்போது என் குறைகளை கேட்க பிரம்மன் வர வேண்டும். என் மனதில் உள்ளதைக் கேட்டே ஆக வேண்டும்” என்று எண்ணி பிரம்மனை வேண்டியது. அதன் முன் பிரம்மன் தோன்றினார். “என்னை அழைத்ததன் காரணம் என்ன?” –… Read more

  • ராஜா ராணி

    குடிசையும் கோட்டை தான், கணவன் மனைவி காதல் கொண்டால்… Read more

  • Acrylic Art #1

    Read more